Monday, July 27, 2009

mullaitheevu

தமிழகத்தின் அரசியல் கட்சிகளில் புலியின் ஒரு இனத்தின் பெயரை கொண்ட கட்சி ஒன்றின் தலைவர் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தேர்தலுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தது நீங்கள் அறிந்ததே. ஈழத்தமிழ் மக்களுக்காக தான் உயிரை துறக்கப்போவது போன்ற பாவனைகளையும் அவர் தோற்றுவித்திருந்தார். ஆனால் தேர்தல் காலத்தில் அவர் மீண்டும் காங்கிரசுடன் இணைந்து கொண்டிருந்தார்.ஏப்ரல் மாதமளவில் மோதல் மிகவும் உக்கிரமடைந்த போது விடுதலைப் புலிகள் மக்களை பாதுகாப்பாக அகற்றிவிட்டு வெளியேறும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் அவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களே. சிறீலங்கா படையினர் குழந்தைகளையும், பெண்களையும், காயமடைந்தவர்களையும் படுகொலை செய்வார்கள் என்பது வெளிப்படையானது.எனவே விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும், முதிய வர்களையும் கொண்ட ஒரு ஆயிரம் பேர் கொண்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியுமா என விடுதலைப் புலிகளின் கேணல் தர உறுப்பினர் ஒருவர் நான் மேல் குறிப்பிட்ட அந்த தலைவரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.ஏப்பிரல் மாதம் 20 ஆம் நாள் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த மக்களை தாங்களே கொண்டுவந்து விடுவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அந்த தலைவர் தான் ஆளும் கட்சியிடம் பேசிவிட்டு பதில் தருவதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் அதனை மறுத்ததுடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொள்வதையும் அவர் தவிர்த்து விட்டார்.இன்று அந்த மக்களில் பெரும்பாலனவர்கள் உயிருடன் இல்லை. குழந்தைகளும், பெண்களும் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் இந்திய தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் அந்த கட்சியின் தலைவர் மீண்டும் ஈழத்தமிழ் மக்களை காப்பாற்ற போவதாக கூறிக்கொண்டு பாரிய பேரணி ஒன்றை அண்மையில் நடத்தி முடித்திருந்தார்.அந்த பேரணியானது எமது மக்களை படுகொலை செய்துவிட்டு அந்த பிஞ்சுக்குழந்தைகளின் சாம்பல் மேட்டில் நடத்தப்பட்ட பேரணியாகவே எனக்கு தோன்றியது. தமிழகத்தின் சில கட்சிகளின் கபட நாடகங்களிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இவர்கள் எல்லாம் தமது அரசியல் நலன்களை உதறிவிட்டு எப்போது இதயசுத்தியுடன் தமிழ் இனத்தை காப்பாற்ற முன்வருவார்கள் என்பது தான் ஒவ்வொரு தமிழ் குடிமகனினதும் மனதிலும் தற்போது உள்ள ஆதங்கம்.

No comments:

Post a Comment